1. தமிழ்ச் சங்கம் அமைவதற்கான அவசியக் காரணம் என்ன?
 • அயர்லாந்தில் உள்ள அனைத்து கவுண்டிகளிலும் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் தமிழ்ச் சமூகம் ஒற்றுமையாக இருப்பதின் அவசியத்தை நம் குழந்தைகள் மத்தியில் எடுத்துச் செல்லவும் தமிழச் சங்கம் அமைவது இன்றியமையாததாகிறது.
 • நாம் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போது, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தமிழ்ச் சங்கத்தின் மூலம் இணைந்து, தமிழர் அடையாளம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு கற்பித்தல் அவசியத் தேவையாகிறது.
 1. ஏற்கனவே பல தமிழ்க் குழுக்கள் களத்தில் பணியாற்றுகின்ற போது இன்னும் ஒரு சங்கம் அவசியமா?
 • தமிழ்க் குழுக்கள் பல இருந்தாலும், அக்குழுக்கள் ஒரு சில நகரங்களில் மட்டும் தனிப்பட்ட குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றன.
 • இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கவுண்டிகளிலும் இருந்து பிரதிநிதித்துவத்துடன் தேசிய அளவில் ஒரு தமிழ்ச் சங்கம் உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.  தேசிய அளவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த சங்கம் ஒன்று அமைவது அவசியமாகிறது.
 1. என் குடும்பத்தினருக்குத் தமிழ்ச் சங்கத்தினால் கிடைக்கும் பலன் என்ன?
 • சங்கத்தின் நோக்கங்களான கல்வி, சமூக நலன், கலாச்சாரம் மற்றும் ஒருங்கிணைப்பு முதலியவற்றை உள்ளடக்கிய செயல் திட்டங்களினால் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
 • பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள், பயிற்சிப் பட்டறைகள், அவசரகால நிதி உதவி, தமிழர்களை ஒன்றிணைத்தல், நட்பு வட்டம் விரிவாக்குதல் போன்ற பலன்களையும் பெறலாம். மேலும் பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும் பயன் பெறலாம்.
 1. அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தினால் சிறு சிறு குழுக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
 • கவுண்டிகள் மற்றும் நகரங்கள் அளவிலுள்ள தமிழ் அமைப்புகள், அயர்லாந்து முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தைச் சென்றடைய, தேசிய அளவில் நிதி திரட்ட, நிதியுதவிகள் பெற, மற்றும் வேறு தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆதரவுகளுக்கு தமிழ்ச் சங்கத்தை அணுகலாம்.
 • சமூக மற்றும் அரசியல் தொடர்பான பணிகளுக்குத் தமிழ்ச் சங்கம் மூலம் அழுத்தம் கொடுக்கலாம்.
 1. அயர்லாந்து தமிழ்ச் சங்கம் சட்டபூர்வமானதா? உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் அவர்களது தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படுமா?
 • அயர்லாந்து தமிழ்ச் சங்கம் CRO-ல் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும், தகவல்களும் உறுப்பினர்களின் அனுமதியின்றி வெளியிடப்படாது. அவை எப்போதும் பாதுகாக்கப்படும்.
 • அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சங்கம் இயங்குவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
 1. சங்கத்தின் கணக்குகள் மற்றும் நிதி வெளிப்படையானதா?
 • சங்கம் அதன் அனைத்து கணக்கு, வழக்குகள் மற்றும் நிதி விபரங்கள் ஒளிவு மறைவின்றி எப்போதும் வெளியிடும். இது தொடர்பான வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை எப்போதும் பின்பற்றப்படும்.
 • சங்கத்தின் வரவு, செலவு கணக்கு விபரங்கள் அது தொடர்பான ரசீதுகள் மூலம் பெறப்பட்டு அல்லது வழங்கப்பட்டு முறைப்படி வரவு / செலவு புத்தகத்திலோ, மென்பொருளிலோ பதிவு செய்யப்படும், மேலும் விபரங்கள் சீரான இடைவெளியில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
 • உறுப்பினரகளுக்குத் தமிழ்ச் சங்கம் தொடர்பான கணக்கு, வழக்குகள் மற்றும் நிதி விபரங்கள் தொடர்பான சந்தேகங்களை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விளக்கம் பெறலாம்.
 1. இச்சங்கம் டப்ளினை அடிப்படையாகக் கொண்டதா அல்லது அனைத்து கவுண்டிகளையும் உள்ளடக்கியதா?
 • இது டப்ளினை மட்டும் சார்ந்த குழுவல்ல, மாறாக அயர்லாந்து முழுவதும் ஒவ்வொரு கவுண்டிகளிலிருந்தும் பிரதிநிதித்துவம் / குழுவைக் கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளது.
 • அயர்லாந்து தமிழ்ச் சங்கம் மூன்று மட்ட அளவில் (3 Level Approach) செயல்படும்.  கவுண்டி, பிராந்திய மற்றும் தேசிய அளவில் உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு தன்னார்வலர்களாகப் பணியாற்றுவார்கள்.
 1. எல்லா கவுண்டிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ள செயல் திட்டங்கள் என்ன?
 • தமிழ் மொழியால் இணைந்து ஒவ்வொரு கவுண்டியிலும் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அடையாளம் கண்டு  ஒருங்கிணைத்து அனைத்து மக்களின் ஆதரவுடன் ஒன்றுபட்ட சங்கமாக செயல்படுவதே எங்கள் இலக்கு.
 • அனைத்து கவுண்டிகளிலும் உள்ள தமிழர்களையும் ஒருங்கிணைக்கும்
  உறுப்பினர் சேர்க்கை ஆகத்து 15, 2018 முதல் தொடங்கியது. மேலும் எங்கள் இலக்கை அடைவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
 1. ஏதேனும் பெரிய நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் திட்டமிட்டுள்ளதா?
 • ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ஒரு சிறிய நிகழ்ச்சி, பயிற்சிப் பட்டறை நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
 • ஒரு வருடத்திற்கு ஒருமுறையேனும் அனைத்துக் கவுண்டிகளிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தேசிய அளவில் ஒன்றுகூட திட்டமிடப்பட்டுள்ளது.
 1. சமூகத் தொண்டு, சமூகப் பணிகளுக்குச் சங்கம் ஆதரவுக் கரம் நீட்டுமா?
 • சங்கத்தின் “உதவிக்கரம்” திட்டம் மூலம், தமிழ்நாடு, இந்தியா மற்றும் அயர்லாந்தில்  ஏற்படும் சமூக  பிரச்சினைகளுக்கு ஆதரவு கரம் நீட்ட ,வருடத்திற்கு நான்கு, நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 1. இலவச உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு, உறுப்பினர் சந்தா எவ்வளவு?
 • இலவச உறுப்பினர் பதிவு 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு,
  ஒரு வருட உறுப்பினர் சந்தாவாக
  குடும்பத்திற்கு €30
  தனி நபருக்கு     €15
  மாணவர்களுக்கு  €10
  என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு சங்கத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
 1. சங்கத்தில் இணைவதன் மூலம், உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற முடியும்? மேலும், உறுப்பினர்கள் எத்தகைய பங்களிப்பை வழங்கலாம்?
 • சங்கத்தின் வலைத்தளத்தைப் பார்வையிட்டு சங்கத்தில் இணையவும். உங்கள் பகுதி  தமிழ் நண்பர்களுக்கு செய்திகளை தெரிவித்து, அவர்களையும் பங்களிக்க உதவவும்.
 • நீங்கள் ஏதேனிலும் ஒரு துறையில் நிபுணத்துவம் உடையவராக இருப்பின், தன்னார்வலராக பணியாற்ற விரும்பினால், சங்கத்தை தொடர்பு கொள்ளவும். (எடுத்துக்காட்டாக, கலை, இலக்கியம், இசை, மருத்துவம் மற்றும் பல).
 1. உறுப்பினர்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டா?
 • சங்கத்தின் பதிவைத் தொண்டு நிறுவன நிலையைப் பெற  (charity status) விண்ணப்பித்துள்ளோம், ஆனால் புதிதாக பதிவுசெய்யப்பட்ட அமைப்பு என்பதால் அந்த நிலையைப் பெற சிறிது காலம் ஆகும் என்பதால் அதுவரை வரி விலக்கு இல்லை.
 1. உறுப்பினர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடத் தேவையானத் தகுதிகள் என்ன?
 • எந்தவொரு தகுதி வாய்ந்த உறுப்பினரும் ( விதிமுறைகளுக்கு உட்பட்டு) சங்கம் தொடர்பான தேர்தல்களில் போட்டியிட முடியும்.
 • அயர்லாந்தில் உள்ள ஒவ்வொரு கவுன்டிகளிலும் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் கிடைக்க அனைத்து உறுப்பினர்களையும் சங்கம் ஊக்குவிக்கிறது.
 1. என்னால் தமிழ் பேச இயலாது, ஆனால் சிறிது புரிந்து கொள்ள முடியும். எனது மூதாதையர் தமிழ் வழி மரபினர், நான் சங்கத்தில் சேர முடியுமா?
 • அயர்லாந்து குடியரசில் குடியேறியத் தமிழ் தொடர்புடைய யாராகிலும் அல்லது குடும்பத்தினரும் உறுப்பினராகலாம்.
 • தமிழ்ச் சங்கத்தின் தொலை நோக்கு, குறிக்கோள், மற்றும் இலக்குகளை  அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  ======================================================================================================================
 1. Why we need Tamil Sangam?
 • Tamil Sangam will unite and integrate all Tamils in every County in Ireland to impart this to our children.
 • As we all living in another Country, it’s very important to be as one family to educate our children about our identity, culture and tradition.
 1. We already have many, why we want one more?
 • Though we have number of Tamil groups, they all scattered in few cities. There is no Tamil association at national level with representation from each County and to unite all.
 • We require one association at national level to represent individual Tamils or a Tamil group.
 1. What is in there for ‘me’ and my children?
 • There are number of benefits & support available for members and their children in the areas Education, Welfare, Culture and Integration as per Sangam’s objectives.
 • Benefits like Counselling/Workshop for adults/children on various topics, financial support for emergency, unite & network with Tamils, be part of traditional/cultural programmes.
 1. What is in there for my Group?
 • Broader community reach, fundraising/sponsorship/support access at national level.
 • Influence political & social causes for the local community through ITS.
 1. Is it Legal, Compliant & all my data secure?
 • Sangam is registered in CRO and all collected data are secured as per data privacy.
 • We continue working on this area to ensure Sangam is Compliant to required Irish and EU laws & regulations.
 1. Are the Accounts & Finances are Transparent & Open?
 • Sangam follows a ‘Zero Tolerance Policy’ in all its Accounts & Finances.
 • Each & every income & expense will be recorded in the book along with receipts and will be published every month in the website.
 • Every member can ask any questions at any time regarding accounts & finances.
 1. Is it Dublin based or inclusive of all Counties?
 • This is NOT Dublin centric group but committed to have representation/team from every County across Ireland.
 • Sangam follows 3LA (three level approach) – County level, Regional level and National level. Team will be elected at each level through transparent ITS elections as per byelaws.
 1. What is the plan to include ALL Counties?
 • Our mission is to identify all Tamils in every County, spread the message, get everyone’s support and be united as Sangam.
 • Large Scale County Level Membership Drive is kick-started on 15/Aug/18 through our website and we continue working on towards reaching our mission.
 1. Is the Sangam planning for any big events?
 • Plan is to have smaller events at least one every quarter.
 • Once a year National level ‘Tamils Gathering’ is also in the plan but subject to resources availability.
 1. Is the Sangam going to support any charity works
 • One of our main activities is ‘ITS Giving’ programme to support social causes
 • Yearly four fundraising events will be planned to support causes in Tamil Nadu, India and Ireland.
 1. After Free Membership, what is the cost?
 • Free membership is limited till end of 2018, after 1 year membership cost is €30 for Family, €15 for single & €10 for students. Please visit our website for more details.
 1. What should I do & how can I contribute?
 • Visit our website, join the Sangam and help spread the message to all your local Tamils.
 • Sangam requires your expertise in number of areas and contact us if you would like to work as volunteer, this will really help us to achieve our objectives.
 1. If I make donation, is it Tax exempted?
 • ITS applied for Charity status, but as a newly registered entity, it may take some time to get the status.
 • Till then donors will not get tax exemption.
 1. Can I contest ITS election?
 • Any eligible member (as per Constitution & Byelaws) can contest ITS elections.
 • Sangam encourages all members to contest and represent every County across Republic of Ireland.
 1. I can’t speak Tamil, but can understand little. My grandmother is Tamil, can I join this Sangam?
 • Any person or family residing in Republic of Ireland with a Tamil connection shall become a member.
 • All members are expected to uphold the Vision, Mission & Objectives of the Tamil Sangam.
 1. What is the Vision?
 • The Tamils in Ireland will sustainably grow to be a community ethically sound with societal awareness, highest quality of health and well-being and hold a strong drive to serve the Tamil community in Ireland and the rest of the world.
 1. What is the Mission?
 • To identify all Tamils, to associate and integrate them with the Sangam and act as a shelter to promote wellbeing of the community with the support of the people. Its aim is to perpetuate, integrate, and assimilate the cultural heritage of the Tamil speaking people into the mainstream of Irish.
 1. What are the Objectives?
 • Assimilate and Educate – to educate our children and the youth with great discipline and moral living; to promote them towards setting footstones for being an iconic role model in the society.
 • Welfare and Well-being – to provide the utmost support and assistance to the members of the community at all times; to provide humanitarian aid to ensure the well-being of the Tamils in Ireland and rest of the world.
 • Societal Integration and Participation – to promote an environment in which volunteering and providing service to one another and the community be the practice primum; to set one-self as an example in the society of these actions and lay a path for the followers of our community.
 • Culture and Practices – to seed the next generation youth with the importance of Tamil history, arts, music, culture, beliefs and practices; to be able to advocate the rich quality of the Tamil culture and tradition in the global corridor.
 1. What are the Benefits?
 • Education: Access to Basic Tamil Language Support, Educational Programmes and Workshops conducted by ITS for children and all age groups.
 • Welfare: Access to ITS Member’s Emergency Support (Moral/Logistics/Emotional/Financial).
 • Integration: A greater opportunity to unite and network with Ireland Tamil Community for ‘Mutual Benefits’ especially for Children development & integration.
 • Culture: Access to Tamil Cultural Programmes and Workshops (Arts/Music/Dance & Martial Arts/Traditional Sports) conducted by ITS for all age groups.
 • All: Access to ITS community Welfare Workshops on various topics useful to the community.
 • (Health, New to Ireland, Student counselling, School Leaving Cert Support, Mortgage etc.)
 1. What are the high level Activities? (The below list is just an indication subject to resources availability and expected to start on or after the Tamil New Year 2019.)

(Education) கற்போம் கற்பிப்போம் – குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நாட்டின் முன்மாதிரியாக உருவாக்குவோம்.

 • Tamil literacy programme – basic support (speak/read/write)
 • Secondary educational support (identify subject matter expert & advise students)
 • Children/Student- support wellbeing/development programmes
 • Yoga, Sports & Games events
 • Career/Entrepreneur development programme

(Welfare) நலம் காப்போம், வளம் சேர்ப்போம் – உறுப்பினர்களின் நலம் கருதி எப்போதும் முழு ஆதரவு கொடுத்து அவசர தேவைக்கான உதவிகளையும் செய்து பொது நலம் காப்போம்.

 • Women’s welfare initiatives
 • Counselling/Guidance services
 • Financial/Moral/Logistics support / Legal, Mortgage & other support
 • Yoga, Sports & Games events

(Integration) சமூக பங்களிப்பை வழங்குவோம் – சமூக தொண்டு மற்றும் சேவை செய்து சமூகத்தில் ஒருங்கிணைந்து (co-ordinating) அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்போம்.

 • Local community services programmes like Educational Aid for local schools
 • Fund raising events
 • Support local/Indian/Tamil charities/Causes

(Culture) பண்பாட்டை பேணுவோம் – இயல், இசை, நாடக கலைகளை இளைஞர்களுக்கு கற்று கொடுத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்போம்.

 • Promote Tamil Life Style Methods (வாழ்க்கை முறை) – Workshop/Speech
 • Traditional festivals & functions (திருவிழா/சடங்கு/விழாக்கள்) – Support Events
 • Spiritual & Moral values (ஆன்மீக மற்றும் நன்னெறிப்பண்புகள்) – Workshop/Speech/Event