அயர்லாந்து தமிழ் சங்கம் என்பது ஒரு மதசார்பற்ற, அரசியல் அல்லாத, இலாப நோக்கமற்ற, வெளிப்படையான தொண்டு நிறுவனம். இது அயர்லாந்து வாழ் தமிழர்களால், அயர்லாந்தில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் “அயர்லாந்து தமிழ்ச் சங்கம்” என்ற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க, தமிழ் வருட பிறப்பு தினமான சித்திரை திருநாள் 1ஆம் நாள், 2018 அன்று, நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் அனைவரும் இணைந்து செயல்படும் நோக்கில் டப்ளினில் துவக்கப்பட்டது.

இது, அயர்லாந்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட, வணிக இலாப நோக்கமற்ற அமைப்பாக செயலாற்றி வருகிறது.

அயர்லாந்து தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள்:  தமிழர் அனைவரையும் அடையாளம் கண்டு, தமிழ் மொழியால் ஒருங்கிணைந்து அனைத்து மக்களின் ஆதரவுடன் இன நலம் காப்போம்.

அயர்லாந்து தமிழ்ச்சங்கம் | பதிவு எண் 631988.